காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

காதல் தோல்வியால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-27 00:08 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 20). இவர், கோயம்பேடில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சதீஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென அந்த பெண், தன்னுடனான காதலை கைவிடுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் சதீஷ்குமார், காதல் தோல்வியால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறைக்கு சென்ற சதீஷ்குமார், புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு தங்கள் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், தூக்கில் தொங்கிய சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்