பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை
சேலம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலம்,
ஆத்தூர் நகரசபை, ஒன்பதாவது வார்டு நேரு நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மகள் சிந்துஜா (15) ஆத்தூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு கிளம்ப சொல்லி சிந்துஜாவின் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிந்துஜா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.