உக்ரைனில் சிக்கி உள்ள குன்னூர் மாணவி
உக்ரைனில் சிக்கி உள்ள குன்னூர் மாணவியை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
குன்னூரை,
உக்ரைனில் உள்ள மாணவர்ளை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஷாயி ஷோனு(வயது21) என்பவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இவருடைய பெற்றோர்கள் ஷாயிநாத் மனைவி யுகேஷ்வரி தனது மகனை மீட்டு வரக் கோரி கோரிக்கை விடுத்து உள்னர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,
உக்ரைனில் உள்ள எங்கள் மகள் மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரஷியா படையெடுத்து உள்ளதால் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அங்கு உள்ள மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.