உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் செலவுக் கணக்கை 30 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-25 07:19 GMT
சென்னை,

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்டவர்கள், போட்டியின்றி தேர்வான வேட்பாளர்கள் செலவுக் கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கணக்குகளை சரியாகத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த விதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்