‘கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும்’ வெங்கையா நாயுடு பேச்சு
‘கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
சென்னை,
தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (வாஷ்) குறித்த தேசிய மாநாட்டை, சென்னை கவர்னர் மாளிகையில் இருந்தவாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாநாட்டு மலரையும் அவர் வெளியிட்டார்.
மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவன தலைமை இயக்குனர் ஜி.நரேந்திரகுமார், இந்தியாவுக்கான ‘யுனிசெப்’ பிரதிநிதி கில்லியன் மெல்சாப், சி.ஆர்.ஐ. தலைவர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
நோய்களை தடுப்பதற்கும், மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிப்பு வழங்குவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவு போன்ற அடிப்படை வசதிகள் முக்கியமானது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கருதி, மக்கள் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட்டுவிடக்கூடாது. அடிக்கடி கை கழுவுவதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான, உடல் திடகாத்திரமான மற்றும் உணர்ச்சிபூர்வமான சூழலில் குழந்தைகள் வளர வேண்டும்.
இதற்காக, பாதுகாக்கப்பட்ட குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் போன்ற முன்எச்சரிக்கை சுகாதார சேவைகள் குறித்து அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
கிராமப்புற குடிநீர் வினியோகத்துக்கு ‘வாஷ்’ செயல் திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமானதாகும். குக்கிராமம் வரை சேவைகளை திறம்பட கொண்டு சேர்க்க பஞ்சாயத்துகளை, அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது அவசியமானதாகும்.
தண்ணீர்தான் ஜீவன்
அனைத்து துறைகளின் சேவைகளையும் குக்கிராமம் வரை திறம்பட கொண்டுசேர்க்க வேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு இது அவசியம். ஒரு தேசம் என்ற முறையில், அனைத்து வீடுகளுக்கும், அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவது பெரும் செயல். ஒரே குறிக்கோள் மற்றும் உறுதிப்பாட்டுடன் ஏராளமானோர் இணைந்து செயல்படுவதன் மூலமே இது சாத்தியமாகும்.
பல்வேறு இந்திய மொழிகளிலும் தண்ணீர் என்ற வார்த்தை, ஜீவன் அதாவது உயிர் என்பதின் பொருளாகும். வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வார்த்தையின் பின்னால் உள்ள முக்கியத்துவத்தை உண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்துள்ளனர். எனவே நாமும், பல நூற்றாண்டுகளாக உயிர் கொடுக்கும் ஜீவ நதிகளை நாடு முழுவதும் வணங்கி வருகிறோம். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைப்பது அடிப்படை தேவை. இந்த விவகாரத்தில் இந்தியா, குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை மேலும் விரைவுபடுத்துவதோடு, கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க செய்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் இயக்கமாக...
மோசமான துப்புரவு செயல்பாடுகளால் பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மாசடைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பொறுப்பான செயல்பாடுகள் மூலம், கழிவுகளை அங்கும், இங்கும் வீசிச் செல்லும் பழக்கத்தை தடுக்க வேண்டும்.
முக்கியமான இந்த பிரச்சினை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதனை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.