சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி!

ராமநாதபுரத்தில், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-23 09:12 GMT
ராமநாதபுரம்,

இராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் 4 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காஜாமுகமது என்பவரை கீழக்கரை காவல் துறையினர் கடந்த 16.6. 2011 ல் கைது செய்து போக்ஸோ சட்டத்தில்  சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று இராமநாதபுரம் மகளிர்  நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா 4 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காஜா முகமதுக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் அபராதமும் சாகும் வரை சிறை தண்டனையும் விதித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் வழங்க கோரி பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்