நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் - மு.க.ஸ்டாலின்
நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை,
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், 'நம்மை காக்கும் 48' சிகிச்சைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2021ல் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 19.77 கோடி மதிப்பீட்டில் 21,762 பேருக்கு தமிழக அரசு சார்பில் உரிய மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”நம்மை காப்போம் 48” திட்டதின் மூலமாக உரிய நேரத்தில் விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் புதிதாக உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய 188 ஆம்புலன்ஸ் சேவையை இன்று மக்கள் பயன்பாட்டிற்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனுடன் தமிழகத்தில் செயல்படும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1491 ஆக அதிரித்துள்ளது.
தொடர்ந்து ஆம்புலன்ஸ்களின் சேவையை அதிகரிப்பதன் மூலம் மாநகர பகுதிகளில் 15 நிமிடங்களிலும் கிராம புறங்களில் 12 முதல் 15 நிமிடங்களிலும் விபத்தில் சிக்குபவர்களை காப்பாத்துவதற்க்கு தமிழக சுகாதார துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.