விருதுநகர் நகராட்சி மாமியார், மருமகள் வெற்றி!
விருதுநகர் நகராட்சி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியார், மருமகள் இருவரும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
விருதுநகர்,
நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மாமியார் மற்றும் மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மருமகள் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.விருதுநகர் நகராட்சி 27-வது வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26-வது வார்டில் மருமகள் சித்ரேஸ்வரி போட்டியிட்டனர்.
இதில், பேபி காளிராஜ் ஏற்கனவே இருமுறை வார்டு கவுன்சிலராக இருந்தவர். மருமகள் சித்ரேஸ்வரி முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றுள்ளனர் விருதுநகர் நகர்மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார்-மருமகள் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.