வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
வால்பாறை,
வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க. போட்டியிட்டது. மேலும் 3, 12, 17, 20 ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. போட்டியிட்ட 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. மேலும் 2 வார்டுகளை கூட்டணி கட்சிகளும் 1 வார்டு அ.தி.மு.க.வும் 1 வார்டு சுயேட்சை வேட்பாளரும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றிது.