ஜெயக்குமாரின் ஒட்டுநர் ஜெகநாதன் கொடுத்த புகாரில் அடிப்படையில் திமுகவினர் 3 பேர் கைது

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஒட்டுநர் ஜெகநாதன் கொடுத்த புகாரில் அடிப்படையில் திமுகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-21 17:42 GMT
சென்னை, 

ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. 

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த சூழலில் அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் இன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் முன்பு அவரது மகனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.  

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஒட்டுநர் ஜெகநாதன் கொடுத்த புகாரில் அடிப்படையில் திமுகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளஓட்டு போட முயற்சி செய்த நபரை பிடிக்க முயன்ற போது திமுகவை சேர்ந்த 3 பேர் தன்னை தாக்கியதாக ஜெகநாதன் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன், ஸ்ரீதர், சுதாகர் ஆகியோரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்