கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்
கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை எனவும் தேர்தல் முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது. வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி தேர்தலில் அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். பண பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் மனுவில் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்து இருந்தார்.