நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முறைகேடுகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவில் நடந்த முறைகேடுகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-02-21 09:59 GMT
சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரையில் முக அடையாளத்தை காண்பிக்க பாஜக முகவர் கூறிய நிலையில், ஹிஜாப் விவகாரம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி எல்.முருகன் செலுத்திய வாக்கு அவருடையது அல்ல. 

மதுரை மாவட்டம் திருமங்கலம், திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவை, நெல்லை, திருச்சி வாக்குச்சாவடிகளில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியினரை வாக்கும் எண்ணும் மையத்தில் அனுமதிக்க கூடாது. வாக்கு எண்ணிக்கையை தெளிவாக வீடியோ பதிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்