இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-21 06:59 GMT
கொழும்பு,

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் சிறையில் அடைத்தனர்.

 இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு  கடந்த 7ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில். வரும் 21-ஆம் தேதி வரை மீனவர்களுக்கு சிறைத் தண்டனையை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த நிலையில், இன்று சிறைக்காவல் நீட்டிப்பு நாள் நிறைவடைந்த  நிலையில், வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிரிசாந்தன் பொன்னுத்துறை இந்த 21  மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்து ஓரிரு நாட்களில் 21 மீனவர்களும் தமிழகம் திரும்ப உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் 47 மீனவர்கள் தமிழகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்