சீர்காழி அருகே பாய்லர் வெடித்து இருவர் பலி: தற்காலிகமாக தொழிற்சாலையை மூட கலெக்டர் உத்தரவு

சீர்காழி அருகே உள்ள தனியார் மீன் அரவை தொழிற்சாலையில் நீராவி பாய்லர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Update: 2022-02-20 13:24 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் தொடுவாய் கிராமத்தில் உள்ள தனியார் மீன் அரவை தொழிற்சாலையில் இன்று மதியம் நீராவி பாய்லர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரான்(25), பல்ஜித்ஓரான்(21) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர் மேலும் ரகுபதி,மாரிதாஸ்,ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் ரகுபதி ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்நிலையில்

தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டார். தொடர்ந்து

விபத்து குறித்து விரிவான அறிக்கை அரசுக்கு அனுப்பியுள்ளோம்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கபடும் எனவும், அதுவரை தொழிற்சாலை இயங்க தற்காலிக தடை விதித்தும் மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்