கள்ள ஓட்டு போடப்பட்டதாக சர்ச்சை: குழப்பத்திற்கு பின் வாக்களித்த மத்திய அமைச்சர் எல். முருகன்
ண்ணாநகரில் உள்ள ஓட்டுச்சாவடியில், மத்திய அமைச்சர் எல். முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை,
தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே, சென்னை, அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த மாநில தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கை வேறு யாரும் போடவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம். சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்றுதான் பதிவானது” எனத்தெரிவித்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அண்ணாநகரில் உள்ள ஓட்டுச்சாவடியில், மத்திய அமைச்சர் எல். முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.