எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கொழும்பு,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது நான்காவது முறையாகும். இந்த மாதத்தில் மட்டும் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் அருகே உள்ள கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு திசையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் கைது செய்யபட்டதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.