கோவை சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நாகராஜன் நியமனம்

கோவை தேர்தல் சிறப்பு பார்வையாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.

Update: 2022-02-18 21:14 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக, நில நிர்வாக ஆணையராக இருக்கிற நாகராஜன் நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மாநகரை பொருத்தவரை 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 125 பேர் அடங்கிய 3 சிறப்பு காவல் படையும், 58 அதிரடிப்படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்