கேரள கவர்னரின் கருத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை குறித்த கேரள கவர்னரின் கருத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-18 10:52 GMT
சென்னை,

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார்.  கவர்னர் தனது உரையில்,   முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும்,

 இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியமானது. புதிய அணையைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறினார். 

கேரள கவர்னரின் உரை பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘ கேரள கவர்னரின் கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுகொடுக்க மாட்டோம்” என்றார். 

மேலும் செய்திகள்