தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி,
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் இன்று தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
அதிமுக செய்த நல்ல பணிகளை வீதி வீதியாக சென்று வாக்களர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
தறிகெட்டு ஓடுகின்ற திமுக ஆட்சியை கயிறு போட்டு நிறுத்தும் தேர்தல் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.
இந்த தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்றார்.