வரலாற்று சிறப்புமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 81 பேர் காயம்
சிங்கம்புணரி அருகே வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டு பழமையான மஞ்சுவிரட்டு விழாவில் மாடு முட்டியதில் 81 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை,
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான மஞ்சுவிரட்டு திருவிழா சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த பல நூறு ஆண்டு காலங்களுக்கு முன்பு இப்பகுதியில் போர் தொடுத்த கேரள சிங்கவள நாட்டு மன்னர் இப்பகுதியை கைப்பற்றி ஜந்து மங்களங்களாக பிரிந்து அதனை முல்லை மங்கலம், சீர்சேர்ந்த மங்கலம், கண்ணமங்கலம், சதுர்வேத மங்கலம் மற்றும் வேழமங்கலம் என பிரித்து கேரள சிங்க வளநாட்டு மன்னர் ஆட்சி நடைபெற்றது.
அந்த காலத்தில் இருந்து இன்று வரை அரளிப்பாறையில் மாசி மகத்தில் ஜந்து நிலை நாட்டார்களால் மஞ்சு விரட்டு நடைபெற்று வருகிறது. சிவகங்கை, புதுக்கோட்டை , திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் என ஜந்து மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்து உள்ளது ஜந்து நிலை நாடு அரளிப்பாறை.
இதில் 1000க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, மேலும் சுமார் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழாவை கண்டு கழித்தனர்.
இம் மஞ்சு விரட்டு விழாவில் மாடுபிடியின் போது சுமார் 80க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ முகாமில் முதல் உதவி சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக 16 பேர் சிவகங்கை, மதுரை ,திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்