சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2022-02-15 12:25 GMT
நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 52) திருமணமாகிய மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வீதியில் விளையாடி கொண்டு இருந்த நாலரை வயது மதிக்கத்தக்க சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அப்பாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் மாற்றுத்திறனாளியான அப்பாசுக்கு கோர்ட் 2 பிரிவுகளின் கீழ்  20 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 

மேலும் செய்திகள்