அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட 105 வயது முதியவர் மரணம்

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட 105 வயது முதியவர் வயோதிகத்தின் காரணமாக உயிரிழந்தார்.

Update: 2022-02-15 10:00 GMT
கோவை,

கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி பிறந்தவர்.  இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில், தேதி உள்ளிட்ட விவரங்களைத் தமிழில் எழுதி வைத்திருந்தனர். இதனால் அவரது வயது சரியாகத் தெரியவந்தது.

1952 முதல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளவர் 105 வயதான மாரப்ப கவுண்டர்.

விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் பார்த்துள்ளார். 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஓட்டுப் போட ஆர்வமாக இருந்தார். இந்த நிலையில் வயோதிகத்தின் காரணமாக இறந்து போனார்.

105 வயது 8 எட்டுமாதத்தில் மாரப்ப கவுண்டர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாரப்ப கவுண்டரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்