முன்பகை காரணமாக துணிக்கடை அதிபர் வெட்டிக் கொலை!

சிவகங்கையில் முன்பகை காரணமாக துணிக்கடை அதிபரை வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Update: 2022-02-15 06:58 GMT
சிவகங்கை,

சிவகங்கை நகர், காந்தி வீதியைச் சேர்ந்த இளங்கோ (31) புதிதாக சிறிய அளவிலான மெஸ் ஒன்றை சிவகங்கையில் துவங்கியுள்ளார். இவரது தம்பி மணிவண்ணன் (26) துணிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வியாபாரம் முடிந்தவுடன் இருவரும் ஹோட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதில் மணிவண்ணனுக்கு கழுத்து மற்றும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது அண்ணன் இளங்கோவிற்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இந்நிலையில் மணிவண்ணனுக்கும் கொலை செய்த தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்