10 ம் வகுப்பு மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

காரைக்காலில் குடும்பத்தினருடன் நட்பாக பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-14 14:21 GMT
காரைக்கால்
காரைக்காலில் குடும்பத்தினருடன் நட்பாக பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

10-ம் வகுப்பு மாணவி

காரைக்காலை அடுத்த நிரவி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர், அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியின் குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்தார்.
மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது, மாணவிக்கும், காளிதாசுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு வந்து, அவளிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர், அவளிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவம் குறித்து கூறினாள். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் நிரவி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு காளிதாசை கைது செய்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

-------=====

மேலும் செய்திகள்