புதுச்சேரி- காரைக்காலில் மாசிமகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை

மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருப்புதல் தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 14:05 GMT
புதுச்சேரி
மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை  மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருப்புதல் தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசிமக தீர்த்தவாரி

மாசிமகம் நாளை  மறுதினம்  (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழாவின்போது புதுவை வைத்திக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் நல்லியகோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப்பெருமாள் உள்ளிட்ட பல்வேறு உற்சவர்கள் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வர். அதுமட்டுமின்றி ஓரிரு நாட்கள் புதுவையில் உற்சவர்கள் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் புதுவை, காரைக்காலில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.
மாசிமகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருப்புதல் தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்