போலீசிடம் போட்டு கொடுத்ததாக தொழிலாளியை தாக்கி தொழிலதிபருக்கு வலைவீச்சு

இரணியல் அருகே போலீசாரிடம் போட்டுக் கொடுத்ததாக தொழிலாளியை தாக்கிய தொழிலதிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-02-14 05:35 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது47).  இவர் சொத்து புரோக்கர் வேலை செய்து வருகிறார். 

சம்பவம் அன்று அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுஜித்(29) என்பவர் மணிகண்டனை பார்த்து மண் எடுத்ததை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது நீதானே என்று கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் அருகே கிடந்த இருப்பு கம்பியை கொண்டு மணிகண்டனை தாக்கி உள்ளார். 

அதனை தடுக்க வந்தவர்களை கொலை மிரட்டல் விடுத்த சுஜித் அங்கிருந்து தப்பித்து விட்டார். பின்னர் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவத்தை அறிந்த இரணியல் போலீசார் சுஜித் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர். 


மேலும் செய்திகள்