போலி மதுபான ஆலைகள் நடத்திய 6 பேர் கைது - 650 மது பாட்டில்கள் பறிமுதல்

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலைகள் வைத்து நடத்தி வந்த 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 650 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-13 10:48 GMT
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை  அருகே  உள்ள துலுக்கம்பட்டியில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாகக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து  சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் துலுக்கம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அந்த பகுதியின் இயங்கி வந்த போலி மதுபான ஆலை ஒன்றை கண்டுபிடித்தனர். 

 பின்னர் போலி மதுபான ஆலை  செயல்பட்டு வந்த குடோனில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை பல உண்மைகள் தெரியவந்துள்ளது 

இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறுகையில்,

போலி மதுபான ஆலை நடத்தி வந்த 6 பேரை கைது செய்து உள்ளோம். இவர்கள் வாடகை நிலத்தில் மதுபான குடோன் அமைத்து இரண்டு வருடங்களாக மதுபானம் உற்பத்தி செய்தது தெரியவந்து உள்ளது. 

மேலும் அவர்களிடம் இருந்து  650 மதுபாட்டில்கள், 2 ஆயிரம் காலி மதுபாட்டில்கள், மற்றும் 2 மூட்டைகளில் இருந்த மதுபாட்டில் மூடிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்து உள்ளோம். பின்னர் அவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ”என்று தெரிவித்தார்.  

மேலும் செய்திகள்