குடி போதையில் கூலி தொழிலாளியை தாக்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரி கைது
போரூர் அருகே குடி போதையில் கூலி தொழிலாளியை தாக்கிய குடிசை மாற்று வாரிய அதிகரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த ராஜா குடிசை மாற்று வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி
மணிகண்டன் என்பவர் ராஜாவின் வீட்டின் அருகே உள்ள ஆட்டோவில் அமர்ந்து இருந்தார். அப்போது மது போதையில அங்கு வந்த ராஜா, மணிகண்டனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனை மணிகண்டன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா அருகில் கிடந்த
உருட்டு கட்டையை எடுத்து மணிகண்டன் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இந்த தாக்குதலில் மண்டை உடைந்து மணிகண்டனை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவருகின்றார்.
இதனை அறிந்த கே.கே.நகர் போலீசார் தொழிலாளியின் மண்டையை உடைத்த ராஜா மீது வழக்கு பதிவு செய்த சிறையில் அடைத்தனர்.