மேற்கு வங்காள சட்டசபையை முடக்கிய கவர்னரின் செயலுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மேற்கு வங்காள சட்ட சபையை முடக்கிய அம்மாநில கவர்னரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
மேற்கு வங்காள அரசுக்கும் ,கவர்னருக்கு மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ,மேற்கு வங்காளத்தில் சட்டசபை கூட்டத்தொடரை நிறுத்துவதாக நேற்று அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார் அறிவித்தார். இது தேசிய அளவில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது
இந்நிலையில் இதற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
மேற்கு வங்காள கவர்னரின் செயல் ,விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது .ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது .அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்