சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளியின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது.

Update: 2022-02-12 13:06 GMT
அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதியரின் 10 வயது மகள் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த 10 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மதுரைவீரன்(56) என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ”சைல்டுலைன் எண் 1098”க்கு போன் செய்து புகார் அளித்தனர். இதனையடுத்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் நேரில் விசாரணை செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை வீரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்