வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்

திருப்பூண்டி அருகே வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் போதை ஆசாமிகள் கடையை அடித்து நொறுக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-12 05:32 GMT
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் அதே பகுதில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் முகமது அலி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அங்கு ஆட்டோவில் மது போதையில் வந்த  4 பேர் அரை கிலோ கேக் கேட்டுள்ளனர். கேக்கை எடுத்து கொடுத்த கடை உரிமையாளர், பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.  

பின்னர் ஆட்டோவில் இருந்து அரிவாளை எடுத்து முகமதுஅலியை தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்து கடை உரிமையார் கூச்சல் போட்டதால்  3 பேரும் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி சென்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்