தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்..
பொன்னேரி அருகே தேங்காய் துண்டுகள் தொண்டையில் சிக்கியதில் குழந்தை உயிரிழந்துள்ளது.
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த வசந்த் என்பவரின் குழந்தை சஞ்சீஸ் வரன். சம்பவத்தன்று சஞ்சீஸ் வரன் வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த தேங்காய்த் துண்டுகளை சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் பெற்றோர்கள் குழந்தையை தூக்கி கொண்டு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை சஞ்சீஸ் வரன் உயிரிழந்துள்ளார்.