மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் கொலை - போலீசார் விசாரணை

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கொடூரமான முறையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-11 00:20 GMT
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறுகையில்,

கடற்கரை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு உள்ளோம். இந்த கொலை சம்பவம் எப்படி அரங்கேறியது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம். முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் மட்டும் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்

மேலும் செய்திகள்