ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2022-02-10 13:12 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிளப் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது யாகூப் (வயது 38). முகமது யாகூப் கோத்தகிரி பேரூராட்சி 11-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.  கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் தள்ளுவண்டி மூலம் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். 

சாலை அகலப்படுத்தும் பணிக்காக கடை அங்கிருந்து எடுக்கப்பட்டு காந்தி விளையாட்டு மைதானம் அருகே கடை வைக்க பேரூராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட்டது. 

அங்கு அந்த இடத்தை வேறு ஒருவருக்கு வழங்கியதாக தெரிகிறது. இதனால் தனக்கு வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கக கோரி இன்று ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சரக்கு வாகனத்தில் வந்த முகமது யாகூப் தனது உடல் மீது டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

போலீசார் டீசல் கேனை பிடிங்கி தடுத்தனர். பின்னர் அவர் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்