இரவு நேர போக்குவரத்து தடை - 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போராட்டம்...!

திம்பம் வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதற்கு தடைவித்ததற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-02-10 07:46 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் செல்வதற்கு 27 வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பாதையில் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் பல வனவிலங்கள் உள்ளது. இந்த பகுதியில் செல்லும் வாகனங்களால் இந்த உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கி  திம்பம் மலைப் பாதையில் இரவு 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சொக்கலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடைவித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் இன்று முதல் போக்குவரத்து தடை அமலுக்கு வருவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

இந்த தடை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்க படுவதாக கூறி 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பண்ணாரி பகுதியில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதயில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்