ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்

இலங்கையில் தவிக்கும் மீனவர்கள், படகுகளை மீட்டுவர வலியுறுத்தி நேற்று ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.

Update: 2022-02-09 19:01 GMT
ராமேசுவரம்,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டில் தவிக்கும் ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர்.

இதனால் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. ராமேசுவரம் கடற்கரை பகுதி மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

ரெயில் மறியல்

அதுபோல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மீன்வளத்துறை டோக்கன் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, ரெயில் நிலையம் நோக்கி சென்று 5 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்