எம்எல்ஏ சென்ற கார் மீது மோதிய லாரி - போலீசார் விசாரணை
கடையநல்லூர் அருகே எம்எல்ஏ சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது
நெல்லை
தென்காசி மாவட்டம வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்காக இன்று மாலை தனது காரில் தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கார் வந்த போது பின்னே வந்த லாரி எதிர் பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் எம்எல்ஏ பயணம் செய்த காரின் பின்புறம் சேதம் அடைந்தது. அதிஷ்டவசமாக சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ மற்றும் உடன் இருந்தவர்களுக்கும் இந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.