நாட்டுப்புற பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம்

நாட்டுப்புற பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரம் அதீனம் சார்பில் கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது, மேலும் தருமபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-02-09 04:33 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. அதில் திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,  கிராமிய இசை கலாநிதி என்கிற பட்டத்தை வழங்கினார், மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் அறிவித்தார்.

இதற்கு முன் பாடகர் டாக்டர் யேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவருக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தருமபுரம் ஆதீனம், சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் அகர்சந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சி. வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் தருமபுரம் ஆதின சுவாமிகள் டாக்டர். வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி எனும் பட்டத்தை வழங்கி, தங்கப்பதக்கம் அளித்து அருளாசி வழங்கினார். இது நாட்டுப்புற இசைக் கலைக்கு  கவுரவத்தை அளித்துள்ளதாக பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்