பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை என்ன ஆனது? தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை, ரூ.100 கியாஸ் மானியம் போன்ற திட்டங்கள் என்ன ஆனது? என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்டையார்பேட்டை, எழும்பூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
எழும்பூர் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ரகசியம் என்ன ஆனது?
அ.தி.மு.க. எனும் கட்சிதான் ஏழை மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து மக்கள் நலன் காத்தது. எதிர்பாராத சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. இந்த 9 மாத காலத்தில் மக்களுக்காக ஏதாவது நல்ல திட்டங்களை அறிவித்தார்களா? தேர்தலின்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று முழங்கினார்கள். இவர்களின் பேச்சை நம்பி பல மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததுதான் மிச்சம்.
எல்லாவற்றையும்விட உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது’, என்றார். அந்த ரகசியம் என்ன ஆனது? ஏமாற்றுவதில் வல்லவர்கள் தி.மு.க.வினர் என்பது இதன்மூலமே தெரிந்துகொள்ளலாம்.
ஆசையை தூண்டி...
பிறரிடம் ஆசையை தூண்டினால்தான் நாம் சாதிக்க முடியும் என்று ஒரு படத்தில் சொல்வார்கள். அதுபோலத்தான் மக்களின் ஆசையை தூண்டி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. தாய்மார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் ரத்து என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். இதெல்லாம் என்னாச்சு? என்று கேட்டால், நிதி இல்லை என்கிறார்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்தபின்பு ஒரு பேச்சா? தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. நிதி இல்லை என்று தெரிந்தும் ஏன் இப்படி வாக்குறுதி கொடுத்தீர்கள்?
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை
எல்லாவற்றையும் விட கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குள்ளான நகைக்கடன் ரத்து என்றார்கள். இப்போது தகுதியுடையோருக்கு மட்டும்தான் நகைக்கடன் ரத்து என்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கினோம். கடந்த ஆண்டு ரூ.2,500 ரொக்கப்பரிசு வழங்கினோம். இந்த ஆண்டு பொங்கல் பரிசு மக்களுக்காக அல்ல, தி.மு.க.வினருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும்தான். பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் ரூ.500 கோடி அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்.
சென்னை மேயர் பதவி
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வறட்சி, வெள்ளம், புயல், கொரோனா என ஏராள பிரச்சினைகள் வந்தன. ஆனால் எல்லாவற்றையும் சந்தித்து வெற்றிகண்ட அரசு தான் அ.தி.மு.க. நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும். இதன் ஒரு கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள். நமது வேட்பாளரே சென்னை மேயராக இருக்க வேண்டும். உள்ளாட்சித்துறை மூலமாக மக்களுக்கான அடிப்படை வசதிகளை நாம் செய்து தர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.