‘வாக்குகளை தாருங்கள்; நல்லாட்சியை தருகிறோம்’ தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் எங்கள் இலக்கு என்றும், வாக்குகளை தாருங்கள், நல்லாட்சியை தருகிறோம் என்றும் தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புதிய கல்வி கொள்கை
‘நீட்' தேர்வு என்ற சதித் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டால், அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இது மாதிரி தேர்வை கொண்டு வருவார்கள். கலைக் கல்லூரிகளுக்கும் கொண்டு வருவார்கள்.
அவர்கள் கொண்டுவரும் புதிய கல்வி கொள்கை என்பதே மாணவர்களை வடிகட்டுவதற்காக கொண்டுவரும் திட்டம்தான். ஒட்டுமொத்தமாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து கல்வி உரிமையைப் பறிப்பதற்காகத்தான் இதுபோன்ற கல்வி கொள்கைகளை அமல்படுத்தத் துடிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்துக்கு பின்னால் போராடி பெற்ற சமூகநீதியை நாம் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்பதன் அடையாளமாகத்தான் இன்றைய தினம் ‘நீட்' விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி இருக்கிறோம்.
சமூக நீதியை காப்போம்
நீதிக்கட்சி ஆட்சியின் முதல் முதல்-அமைச்சரான கடலூர் வக்கீல் சுப்பராயலுவின் சொந்த மாவட்டத்தில் நடக்கும் இந்த காணொலி கூட்டத்தின் வாயிலாக சமூகநீதியை எந்நாளும் காப்போம் என்று உறுதியளித்து, என்னுடைய தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன்.
நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காமல் போனாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டோம் என்று அடம்பிடிக்கும் அரசாக மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது.
பொம்மை எப்படி இருக்கும்?
ஆட்சியை இழந்த ஆற்றாமையில் நித்தமும் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. என்னைச் சர்வாதிகாரி என்கிறார் பழனிசாமி. அடுத்த நிமிடமே என்னை பொம்மை என்றும் சொல்கிறார். அவருக்கு சர்வாதிகாரி என்றால் என்ன என்பதும் தெரியவில்லை. பொம்மை எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை.
கொரோனா முதன் முதலாக பரவத் தொடங்கியதும், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்கலாம் என்று நான் ஒரு கருத்தைச் சொன்னபோது - ‘ஸ்டாலின் என்ன டாக்டரா?' என்று பழனிசாமி கேட்டதுதான் சர்வாதிகாரத்தனம். டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து, அவர்கள் விவசாயிகள் அல்ல, தரகர்கள் என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரத்தனம். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சம்பள உயர்வு கேட்டபோது, “எல்லாரும் சம்பளம் கூட்டிக்கேட்டால் எப்படி தரமுடியும்? அவசர காலத்தில் வேலை செய்வதுதான் அவர்கள் பணியே” என்று பழனிசாமி சொன்னதுதான் சர்வாதிகாரம். 13 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதை டி.வி.யைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று முதல்-அமைச்சராக இருந்துகொண்டு சொன்னதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம்.
கம்பெனி
மத்திய பா.ஜ.க. அரசு சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி அவர்களின் பாதம் தாங்கிக் கிடந்த பழனிசாமியை விட தலையாட்டிப் பொம்மைக்கு உதாரணம் வேண்டுமா?. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள். இன்று பதவி பறிபோனதும் ஊருக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள் இருவரும். அ.தி.மு.க.தான் மக்களாட்சியைக் கொடுத்தது என்கிறார் பழனிசாமி. மக்களாட்சியை அ.தி.மு.க. கொடுத்தால், அதற்கு மக்கள் ஏன் தோல்வியைக் கொடுத்தார்கள்?
பழனிசாமி கொடுத்த செல்போன் உங்கள் ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுப்பதாக சொல்லி 50 பேருக்கு கொடுத்துவிட்டு கடையை மூடிய கம்பெனிதான் அ.தி.மு.க. திடீரென்று சீட்டுப் பிடிக்கும் கம்பெனிகள் உருவாகும். மக்களிடம் பணத்தை வசூல் செய்ததும் ஓடிவிடும். அப்படி ஓடும் கம்பெனிதான் பழனிசாமி - பன்னீர்செல்வம் கம்பெனி. அவர்கள் எங்களைப் பார்த்து குறை சொல்வதா? தேர்தல் வாக்குறுதிகளை அச்சிட்டு கொடுத்திருக்கிறேன். பெரும்பாலான வாக்குறுதிகளை எட்டே மாதத்தில் நிறைவேற்றிவிட்டதாக துணிச்சலாக நான் சொல்கிறேன்.
வாக்குகளை தாருங்கள்
அந்த புத்தகத்தை வைத்துப்பாருங்கள். அதில் சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். அனைத்தையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது ஒன்றுதான் எமது இலக்கு. மக்களாகிய நீங்கள் உங்கள் வாக்குகளைத் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து நல்லாட்சியைத் தருகிறோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.