தொழில் போட்டியில் இளம்பெண் வெட்டிக்கொலை

தொழில் போட்டியில் இளம்பெண் வெட்டிக்கொலை கணவருடன் அக்காள் கைது.

Update: 2022-02-08 19:53 GMT
திருச்சி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி, கலைச்செல்வி (வயது 34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர். இந்தநிலையில் தொழில் போட்டி காரணமாக அக்காள் கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. கடந்த 6-ந்தேதி முத்துலட்சுமியிடம் கலைச்செல்வியும், அவரது கணவர் நாகராஜூம் தகராறு செய்துள்ளனர். அப்போது முத்துலட்சுமி நாகராஜை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியின் தலையில் ஓங்கி வெட்டினார். இதில் படுகாயமடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலைச்செல்வியையும், அவரது கணவர் நாகராஜையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்