திருமணம் முடிந்த கையோடு போலீஸ் தேர்வில் கலந்துகொண்ட புதுப்பெண்

திருமணம் முடிந்த கையோடு புதுவையில் நடந்த போலீஸ் தேர்வில் புதுப்பெண் கலந்துகொண்டார்.

Update: 2022-02-08 18:39 GMT
புதுச்சேரி
திருமணம் முடிந்த கையோடு புதுவையில் நடந்த போலீஸ் தேர்வில் புதுப்பெண் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு தேர்வு

புதுவை காவல்துறையில் 431 பணியிடங்களை நிரப்பு வதற்காக உடல் தகுதி தேர்வுகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய இந்த தேர்வு 5-ந்தேதி வரை ஆண்களுக்கு நடந்தது.
நேற்று முன்தினம் முதல் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் உடல் எடையை அதிகரித்து காட்ட இளம்பெண் ஒருவர் 5 உடைகளை அணிந்து வந்தார். அது கண்டு பிடிக்கப்பட்டு அவர் உடல் தகுதி தேர்வில் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டார்.

புதுப்பெண்

இந்தநிலையில் புதுப்பெண் ஒருவரும் போலீஸ் தேர்வில் கலந்துகொண்டார். திருக்கனூர் அருகே உள்ள பி.எஸ். பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணான பிரவிணாவுக்கும் கிளியனூரை சேர்ந்த ஹரிபிரசாத்துக்கும் நேற்று திருமணம் நடந்தது.
பிரவிணா ஏற்கனவே போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். திருமணம் முடிந்த நிலையில் அவர் தனது கணவனோடு வந்து போலீஸ் தேர்வில் கலந்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு போலீஸ் தேர்வில் கலந்து கொண்ட அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்