நகர்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

Update: 2022-02-08 04:21 GMT
கோப்புப்படம்
சென்னை,

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் தனித்து போட்டியிடுவதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் மூலம் அவர் கூறியதாவது,

நடிகர் விஜயின் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டனி, ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு அனைத்து மாவட்ட தலைவர்களும், ஒன்றிய நகர பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும் தொண்டர்களும், ரசிகர்களும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்து விஜய் மக்கள் இயக்கம் செய்துள்ள நற்பணிகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையின் வாயிலாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்