‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டசபை சிறப்பு கூட்டம்
கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் டி.வி.க் களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
சென்னை,
தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி சட்டமசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா அன்றே கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்வி விவகாரங்கள் பொதுப்பட்டியலில் இருப்பதால், அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அந்த ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அந்த சட்ட மசோதாவை கவர்னர் அனுப்பி வைக்க வேண்டும். இது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறையாகும்.
இந்த நிலையில் 142 நாட்கள் கழித்து கவர்னர் ஆர்.என்.ரவி, அந்த சட்டமசோதாவை சபாநாயகருக்கு கடந்த 1-ந் தேதி திருப்பி அனுப்பி வைத்தார். அதை திருப்பி அனுப்பி வைப்பதற்கான காரணத்தையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்தார்.
கவர்னர் கருத்து
ஆனால் இதுபற்றிய தகவல் வெளிவராத நிலையில் 3-ந் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சமூகநீதி அடிப்படையில் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகு, மாணவர்களின் நலனுக்கு குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு இந்த மசோதா எதிரானது என்ற கருத்திற்கு கவர்னர் வந்துள்ளார்.
எனவே அந்த சட்ட மசோதாவை தமிழக சட்டசபை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி, அது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான விரிவான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில், விரிவான ஆய்வை, சுப்ரீம் கோர்ட்டு நடத்தி, ஏழை மாணவர்களின் பொருளாதார சுரண்டலை ‘நீட்’ தேர்வு தடுக்க கூடியது என்று கூறி, சமூக நீதியை முன்னெடுத்து செல்வதற்காக ‘நீட்’ தேர்வை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்று அதில் கூறியிருந்தார்.
அனைத்து கட்சி கூட்டம்
இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று கடந்த 3-ந் தேதியன்றே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகளாக அந்த கட்சிகளின் எம்.எல். ஏ.க்கள் பங்கேற்றனர்.
அதில், ‘நீட்’ தேர்வு விலக்கு கோரும் அந்த சட்ட மசோதாவை சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி அங்கு விவாதித்து, மீண்டும் அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
டி.வி.க்களில் நேரடி ஒளிபரப்பு
இந்த முடிவு, சபாநாயகர் அப்பாவுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி சபாநாயகர், சட்டசபை விதி 143-ன் கீழ் சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை உடனடியாக கூட்டி ‘நீட்’ சம்பந்தப்பட்ட சட்ட மசோதாவை மீண்டும் விவாதித்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று கடிதம் மூலம் எனது கவனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கொண்டு வந்தார்.
அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் நியாயமாகவும், மக்கள் நலன் சார்ந்தும் இருப்பதால், 8-ந் தேதி (இன்று) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு சிறப்பு கூட்டத்தை கூட்டுவதென்று தீர்மானித்துள்ளேன் என்று அறிவித்தார். அதன்படி சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதை டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாக காணலாம்.
இந்த நிலையில், சட்டமசோதாவை திருப்பி அனுப்பியதற்காக காரணத்தை தெரிவித்து சபாநாயகருக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை உரிமைக்கு உட்பட்டது என்பதால் அதை வெளியிடக்கூடாது என்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சட்டசபையில் இன்று...
அரசினர் சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்தல் என்ற காரணத்திற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்று சட்டசபை கூடியதும், கவர்னரிடம் இருந்து வரப்பெற்ற பத்திரிகை செய்தி மற்றும் அவர் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைச் சட்ட மசோதா ஆகியவற்றை அவையில் விவாதத்திற்காக சபாநாயகர் மு.அப்பாவு வைப்பார்.
அந்த மசோதா மறு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோருவார். மீண்டும் அந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருவார். அதைத்தொடர்ந்து விவாதம் தொடங்கும்.
சட்டசபையில் கலந்து கொள்ளும் கட்சிக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அதில் பேச அனுமதிக்கப்படுவர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை முன்வைப்பார்.
பின்னர் அந்த மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்படும். அதில் கிடைக்கும் வாக்கெடுப்பின் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.க. தவிர சட்டசபையில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்துமே ‘நீட்’ தேர்விற்கு எதிராக இருப்பதால் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்படவே அதிக வாய்ப்புள்ளது.