இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல்
மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்க விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.