மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: பூச்சி மருந்து குடித்து கணவன் தற்கொலை
அறந்தாங்கி அருகே மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே காயக்காட்டையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32). இவரது மனைவி பிரசன்னாதேவி. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசன்னாதேவி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கருப்பையா தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கருப்பையா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை