மெரினா கடற்கரை கரையில் கூடிய மக்கள் கூட்டம்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மெரினா கடற்கரையில் விடுமுறையை கழிக்க மக்கள் கூட்டமாக கூடினர்.

Update: 2022-02-06 13:33 GMT
சென்னை,

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு சென்னை மெரினா கடற்கரை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பொழுதை கழிப்பதற்காக பெரும்பாலான மக்கள் திரளாக குவிந்தனர். இதனால் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டது. 

கொரோனா சூழலிலும் பயமின்றி மக்கள் கூட்டமாக சுற்றியது, அதிலும் பலர் முக கவசமின்றி நடமாடியது போன்றவற்றால் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

மேலும் செய்திகள்