சுனாமியில் பெற்றோரை பிரிந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கடந்த 2004 சுனாமியில் பெற்றோரை பிரிந்து பச்சிளம் குழந்தையாக தத்தெடுத்த பெண்ணுக்கு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவரது தலைமையில் திருமணம் செய்துவைத்தார்.

Update: 2022-02-06 12:03 GMT
நாகை

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியதில்  ஏராளமான குழந்தைகள் தாயையும், தந்தையையும் இழந்தனர். அப்போது நாகையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் தாய், தந்தையை இழந்த 99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். அதில் அதில்  9 மாத குழந்தையான சௌமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளம் குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட கலெக்டராக இருந்த தற்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். 

18 வயதை கடந்த பின்பு நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில்  சௌமியாவின் திருமணம் நாகையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது

சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ராதாகிருஷ்ணன் பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தை தான் சௌமியா என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசிய ராதாகிருஷ்ணன், மனித நேயம் மட்டும்தான் இது நாள் வரை நிலைத்து நிற்கிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்