நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. வேட்பாளரால் பரபரப்பு

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென தி.மு.க.வில் இணைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-06 00:32 GMT


ஊத்துக்கோட்டை,



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது.  இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க.வில் பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு, செட்டி தெரு பகுதியில் போட்டியிட முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க. பொருளாளருமான அண்ணாதுரை அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள்.  மதியம் வரை அண்ணாதுரையை தவிர மற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.  இதனால், 12வது வார்டிற்கு மாற்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  நேற்று முன்தினம் இரவு எல்லாபுரம் ஒன்றிய செயலர் முன்னிலையில், அ.தி.மு.க.வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அண்ணாதுரை தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.  இந்த சம்பவம் உள்ளூர் பகுதி அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் செய்திகள்