பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

மாணவிகள் முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளித்ததால் தண்டனை ரத்து என்று ஐகோர்ட்டு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-05 12:45 GMT
சென்னை, 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தருமபுரி ஆசிரியர் செந்தில் குமாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தருமபுரியை சேர்ந்த ஆசிரியர் செந்தில் குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணை செய்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கின் விசாரணையின் போது, சாட்சியமளித்த மாணவி, பாலியல் தொல்லை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தது. 

மேலும்,  பிற மாணவிகளின் சாட்சியம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தது. முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என கூறி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட  5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி அறிவித்தார்.

மேலும் செய்திகள்